Cooking Tips : இட்லி தோசைக்கு ஏற்ற கலக்கலான சட்னி.. இன்றே செய்து அசத்துங்க!
தனுஷ்யா | 22 Jul 2024 03:35 PM (IST)
1
உளுத்தம்பருப்பை சிறிது நல்லெண்ணெய் விட்டு வறுத்து தேவைக்கேற்ப தேங்காய், மிளகு சேர்த்து சட்னி செய்தால் இட்லி தோசைக்கு தொட்டுக்கொள்ள சுவையாக இருக்கும்
2
இஞ்சி பூண்டு விழுது அரைக்கும் போது அதனுடன் உப்பு தூள், ஒரு தேக்கரண்டி சூடான எண்ணெய்யும் கலந்து வைத்தால் நீண்ட நேரம் கெடாமல் இருக்கும்.
3
ஏலக்காய், கிராம்பு, மிளகு ஆகியவற்றை ஒன்றாக காற்று புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்தால் நீண்ட நாள் கெடாமல் இருக்கும்
4
கீரை கூட்டு செய்யும் போது பூண்டு மற்றும் சோம்பை லேசாக இடித்து சேர்த்துக்கொண்டால் கீரை கூட்டு வாசமாக இருக்கும்
5
பருப்பு சாதத்திற்கு பருப்பை வேக வைக்கும் போது முருங்கை காயின் நடுவில் உள்ள சதை பகுதியையும் எடுத்து வேக வைத்து சாதத்துடன் சேர்த்தால் சாப்பிட சுவையாக இருக்கும்