Homemade Horlicks Powder : வீட்டிலே சத்தான ஹார்லிக்ஸை சிம்பிளாக செய்வது எப்படி?
வீட்டிலே சுலபமாக ஹார்லிக்ஸ் செய்யலாம் என்ற போது எதற்காக கடையில் வாங்க வேண்டும்..? வாருங்கள் ரெசிபியை பார்க்கலாம்..!
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : 1/2 கப் பச்சை வேர்க்கடலை, 1/2 கப் பாதாம், 1/4 கப் பால் பவுடர், 1/2 கப் வெல்லம் அல்லது அதற்கு மேல், 1 கப் மால்ட் பவுடர், 3-5 டீஸ்பூன் கோகோ தூள்.
மால்ட் பவுடர் செய்ய தேவையான பொருட்கள் : 1 1/2 கப் பார்லி தானியங்கள், தண்ணீர்.மால்ட் பவுடர் வீட்டில் செய்வதற்கு பார்லியை ஊற வைத்து அது முளைக்கட்டியதும் காய வைத்து ஒவனில் வைத்து வறுத்து பவுடராக அரைத்து கொள்ளவும்.
முதலில் ஒரு பேனில் பாதாம் மற்றும் வேர்க்கடலையை தனித்தனியாக வறுத்து கொள்ளவும். பிறகு வேர்க்கடலையின் தோலை நீக்கவும்.
பிறகு ஒரு ப்ளெண்டரில் வறுத்த வேர்க்கடலை, பாதாம், பால் பவுடரோடு சேர்த்து அரைத்து கொள்ளவும். பிறகு அதனுடன் வெல்லம் மற்றும் மால்ட் பவுடர் சேர்த்து சல்லடையில் சலித்து எடுத்து கொள்ளவும். அவ்வளவு தான் ஹார்லிக்ஸ் தயார்.
சாக்லேட் சுவையுள்ள ஹார்லிக்ஸுக்கு கொக்கோ பவுடரை சேர்த்து கொள்ளவும்.சூடான பாலில் 1-2 டீஸ்பூன் ஹார்லிக்ஸ் தூள் சேர்த்து பருகவும். சர்க்கரை சேர்க்காமல் பருகுவது நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -