Protein Balls Recipe : ' சின்ன உருண்டை..பெத்த ப்ரோடீன்..’ ஒருநாளுக்கு தேவையான மொத்த ப்ரோடீனும் இதில் இருக்கு!
ஜிம் செல்பவர்கள் கவனத்திற்கு..! தினமும் உங்கள் ப்ரோடீன் தேவையை பூர்த்தி செய்ய சிக்கன், மட்டன், முட்டை என்று சாப்பிட்டு சலித்து விட்டதா..? கவலை வேண்டாம்..இதோ இந்த ப்ரோடீன் பால்ஸை வீட்டில் செய்து உண்ணுங்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : 3 டீஸ்பூன் வேர்க்கடலை, 1 கப் எள், ¾ கப் ஆளிவிதைகள், 300 கிராம் பேரீச்சம்பழம், ¾ கப் பாதாம், 2 டீஸ்பூன் பிஸ்தா நறுக்கியது, 2 டீஸ்பூன் பூசணி விதைகள், 2 டீஸ்பூன் சூரியகாந்தி விதைகள், 2 டீஸ்பூன் சியா விதைகள், ½ தேக்கரண்டி ஏலக்காய் தூள்.
செய்முறை : முதலில் ஒரு பேனில் 3 டீஸ்பூன் வேர்க்கடலை, 1 கப் எள், ¾ கப் ஆளிவிதைகள் சேர்த்து மொறு மொறுவென அரைத்து கொள்ளவும். அதன் பிறகு இதனை நன்றாக ஆற வைத்து கொர கொரப்பாக அரைத்து எடுத்து கொள்ளுங்கள்.
அதன் பின் 300 கிராம் பேரிட்சம்பழத்தை மிக்ஸியில் தண்ணீர் சேர்க்காமல் மென்மையாக அரைத்து ஏற்கனவே அரைத்து வைத்த பொடியுடன் சேர்த்து கலந்து கொள்ளவும்.
மீண்டும் ஒரு பேன் எடுத்து அதில் ¾ கப் பாதாம், 2 டீஸ்பூன் பிஸ்தா நறுக்கியது, 2 டீஸ்பூன் பூசணி விதைகள், 2 டீஸ்பூன் சூரியகாந்தி விதைகள், 2 டீஸ்பூன் சியா விதைகள் சேர்த்து மிதமான சூட்டில் வறுத்து எடுத்து கொள்ளவும்.
தற்போது இந்த வறுத்த விதைகளுடன் ஏலக்காய் தூள் சேர்த்து ஏற்கனவே அரைத்து வைத்திருந்த பொடியுடன் சேர்த்து பிசைந்து உருண்டையாக பிடித்து கொள்ளுங்கள் அவ்வளவு தான் சுவையான ப்ரோடீன் பால்ஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -