Fried Potato Cakes: மாலை வேளையில் சாப்பிட சுவையான புதிய ஸ்நாக்ஸ் ரெடி!
மிகவும் சுவையாகவும் சுலபமாகவும் செய்யக்கூடிய ஸ்நாக்ஸ் ரெசிபி தேடிக் கொண்டிருப்பவர்கள் கவனத்திற்கு..! இதோ இந்த புதிய ஃப்ரைட் பொட்டேடோ கேக்ஸ் ரெசிபியை மின்னல் வேகத்தில் செய்து அசத்திடுங்கள்!
தேவையான பொருட்கள்: துருவிய உருளைக்கிழங்கு - 2 கப், துருவிய கேரட் - 1/2 கப், 1 மீடியம் சைஸ் வெங்காயம் - மெல்லியதாக வெட்டப்பட்டது, ஸ்ப்ரிங் ஆனியன்ஸ், 3 டீ ஸ்பூன் சோள மாவு, 3 டீ ஸ்பூன் கடலை மாவு, 1 டீஸ்பூன் சில்லி ப்ளேக்ஸ் (உங்கள் சுவைக்கு ஏற்ப அதிகமாகவோ அல்லது குறைவாகவோ சேர்க்கவும்) 1 தேக்கரண்டி மிளகுத்தூள், 1 டீ ஸ்பூன் சாட் மசாலா, உப்பு, எண்ணெய்.
செய்முறை: முதலில் ஒரு பவுலில் துருவிய உருளைக்கிழங்கு, துருவிய கேரட், வெங்காயம், ஸ்ப்ரிங் ஆனியன், சோள மாவு, கடலை மாவு, சில்லி ப்ளேக்ஸ், மிளகுத்தூள், சாட் மசாலா, உப்பு அனைத்தையும் சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
பிறகு ஒரு பேனை சூடு செய்து அதில் எண்ணெய் ஊற்றி கொள்ளவும்.
எண்ணெய் சூடானதும் அதில் தயார் செய்து வைத்திருக்கும் கலவையை வடை போல் தட்டி போட்டு பொன்னிறம் ஆகும் வரை பொரித்து எடுக்கவும்.
அவ்வளவுதான் சுவையான ஃப்ரைட் பொட்டேடோ கேக்ஸ் தயார். இதை சூடாக கெட்சப் அல்லது க்ரீன் சட்னியோடு சாப்பிடலாம்.