Hair Fall : தலை முடி அதிகமா உதிர்கிறதா? உங்களுக்கான வீட்டு வைத்தியம் இதோ!
அனுஷ் ச | 03 Aug 2024 05:00 PM (IST)
1
கரிசாலை இலை, காய்ந்த நெல்லிக்காய், அதிமதுரம் ஆகியவற்றை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வர முடி உதிர்தல் குறையலாம் .
2
நில அவரை இலையை அரைத்து, முடி உதிரும் இடங்களில் தேய்த்து வந்தால் முடி உதிர்தல் குறையலாம்.
3
சின்ன வெங்காயத்தை அரைத்து, சாறு பிழிந்து முடி கொட்டிய இடத்தில் தடவி 15 நிமிடம் கழித்து குளித்து வந்தால் தலை முடி அடர்த்தியாக வளரலாம்.
4
செம்பருத்திப் பூவை அரைத்து வாரம் ஒரு முறை தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி உதிர்தல் குறையலாம்.
5
பொன்னாங்கண்ணி சாறு, கரிசலாங்கண்ணி சாறு, தேங்காய் எண்ணெயை சமமாக எடுத்து நீர் வற்ற காய்ச்சி தலைக்கு தேய்த்து குளித்து வந்தால் முடி வளரலாம்
6
சின்ன வெங்காயம் மற்றும் செம்பருத்தி பூவை சேர்த்து அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் தலை முடி அடர்த்தியாக வளரலாம்