Home Gardening tips : இதை பின்பற்றினால் பூக்காத செடியும் பூத்துக்குலுங்கும்!
தனுஷ்யா | 12 Mar 2024 04:56 PM (IST)
1
வீட்டில் செடி வளர்ப்பது பலருக்கும் பிடிக்கும். குறிப்பாக பூச்செடிகள், வீட்டிற்கு தனி அழகை கொடுக்கும்.
2
கடையில் வாங்கி வரும் செடிகளை வீட்டில் நடும்போது அது வளரவே வளராது. இந்த பதிவில், பூக்கள் செழிப்பாக வளர்க்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
3
இதற்கு 50 கிராம் காய்ந்த வேர்க்கடலை, 50 கிராம் கடுகு தேவைப்படும். இதை மிக்ஸியில் போட்டு பவுடர் போல் அரைத்துக்கொள்ள வேண்டும்.
4
இந்த கலவையை 5 லிட்டர் தண்ணீரில் மிக்ஸ் செய்துக்கொள்ள வேண்டும். இதை அப்படியே 10 நாட்களுக்கு விட்டுவிட வேண்டும்.
5
இதை 25 லிட்டர் தண்ணீரில் கலந்து செடிகளில் ஊற்றலாம். பூச்செடி மட்டுமல்லாமல் எந்த வகை செடி என்றாலும் செழிப்பாக வளரும்.
6
இதை தொடர்ந்து செய்து வந்தால், உங்கள் வீட்டு தோட்டத்தில் நல்ல மாற்றம் தெரியும்.