Hibiscus Hair Mask: முடி கொட்டும் பிரச்சினைக்கு தீர்வு வேண்டுமா..? செம்பருத்தி மாஸ்க் செய்வது எப்படி?
இயற்கையான வழிமுறைகளை பயன்படுத்தி கூந்தலை பராமரிக்கலாம். இயற்கையான வழியில் செம்பருத்தி மாஸ்க் பயன்படுத்தி கூந்தலை பராமரிக்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபிரெஷாக பறித்த சில செம்பருத்தி பூக்கள் மற்றும் செம்பருத்தி இலைகளை தண்ணீரில் கழுவி எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் பூவின் இதழ்களை பிரித்து இதழ் மற்றும் இலைகளை மிக்சி ஜாரில் சேர்த்து தேவைப்படும் அளவு தண்ணீர் சேர்த்து மைய அரைத்துக் கொள்ள வேண்டும்.
இந்த பேஸ்டை தலைமுடி வேரில் இருந்து நுனி வரை தடவிக் கொள்ளுங்கள்.
தலையில் அனைத்து இடத்திலும் இந்த பேஸ்ட் படும்படி அப்ளை செய்ய வேண்டும்.
பின்னர், தலைமுடியை கட்டி சுமார் 30- 40 நிமிடங்கள் உலர வைக்க வேண்டும். இறுதியாக ரசாயனம் குறைவான ஷாம்பை பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இந்த மாஸ்க்கை வாரத்திற்கு ஒரு முறை தொடர்ச்சியாக பயன்படுத்தி வருவதன் மூலம் உங்கள் கூந்தலில் மாற்றங்களை கண்கூடாக காண முடியும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -