Aloe Vera For Hair : கரு கரு முடிக்கு கற்றாழையை இப்படி பயன்படுத்தி பாருங்க!
கற்றாழையில் வைட்டமின் சி, வைட்டமின் ஈ, வைட்டமின் பி12, ஃபோலிக் ஆசிட் ஆகியவை உள்ளன.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎண்ணெய் வடியும் ஸ்கால்பை கொண்டவர்கள், வறண்ட முடியை கொண்டவர்கள், சுருட்டை முடி உள்ளவர்கள் இதை பயன்படுத்தலாம்.
இதில் இருக்கும் அழற்சி எதிர்க்கும் பண்பு , ஸ்கால்ப்பில் ஏற்படும் எரிச்சலை குறைக்கும், முடியை மென்மையாக்கும், முடி வளர்ச்சிக்கு உதவலாம், சுருட்டையை அழகாக்கும்.
இப்போது, கற்றாழையை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று இங்கு காணலாம்.. முதலில் கற்றாழையின் சதை பகுதியை மட்டும் எடுத்து தண்ணீரில் நன்றாக அலசிக்கொள்ள வேண்டும்.
சுத்தமான தேங்காய் எண்ணெய், கற்றாழை ஜெல் என இரண்டையும் சேர்த்து அரைத்து கொள்ள வேண்டும். இந்த கலவையை, ஸ்கால்ப்பில் படும்படி தடவ வேண்டும். 20 நிமிடம் ஊற வைத்து தலைக்கு குளிக்க வேண்டும். கற்றாழையை அப்படியே கூட தலையில் தடவலாம்.
மாதத்திற்கு இரண்டு முறை இதை செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும். பொறுப்புத்துறப்பு : இந்த உள்ளடக்கம் பொதுவான தகவல்களை உள்ளடக்கியது. இது மருத்துவ ரீதியான அறிவுரையோ, கருத்தோ அல்ல. தனிப்பட்ட உடல்நலம் சார்ந்த தகவல்களுக்கு மருத்துவரை அணுகுவது மட்டுமே சரியான தீர்வாகும். ஏபிபி பொதுத் தகவல்களுக்கான பொறுப்பை ஏற்காது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -