Peanut Chutney : ஆந்திரா ஸ்டைலில் வேர்க்கடலை சட்னி.. இட்லி, தோசை, சப்பாத்திக்கு பெஸ்ட் காம்பினேஷன்..
முதலில் ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலையை எடுத்துக்கொண்டு கருகாமல் அதனை வறுத்துக்கொள்ளவும். ஒருவேளை நீங்கள் வறுத்த வேர்க்கடலையாக வைத்திருந்தால் மீண்டும் வறுக்க வேண்டியதில்லை.
மிக்சியில் வேர்க்கடலை, துருவிய தேங்காய், மிளகாய் வத்தல், புளி மற்றும் சிறிதளவு தண்ணீர் சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
மிக்சி ஜாரில் அரைத்த சட்னியை பாத்திரத்தில் மாற்றி எடுத்துக்கொண்டு தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி விடவேண்டும்.
பிறகு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி கடுகு பொரிந்ததும் அதனுடன் சிறிதளவு கருவேப்பிலை சேர்த்துக்கொண்டு பின்னர் அரைத்துள்ள சட்னியை சேர்க்கவும்.
சுவையான வேர்க்கடலை சட்னி தயாராகிவிட்டது. இதனை நீங்கள் இட்லி அல்லது தோசைக்கு சைட்டிஸ்ஸாக பரிமாறலாம்.
வெறும் 10 நிமிடங்களில் சுவையான வேர்க்கடலை சட்னியைக் கொஞ்சம் உங்களது வீடுகளில் செய்து பாருங்கள்
வேர்க்கடலையில் கொழுப்பு, புரோட்டின், புரதச்சத்து பொட்டாசியம் பாஸ்பரஸ், வைட்டமின் பி மற்றும் மெக்னீசியம் அதிகளவில் உள்ளது.