உணவில் தினமும் மிளகு: ஏன் அவசியம்? எப்படி சேர்த்துக் கொள்ளலாம்?
உங்கள் உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது, நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பது மட்டுமில்லாமல் வழக்கமான வைரஸ் தொற்றுகளை எதிர்த்துப் போராடுவும் செய்யும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநெஞ்சுச்சளி, ஜலதோஷம், நுரையீரல் மற்றும் செரிமான மண்டல உறுப்புகளின் செயல்திறனைக் கூட்டும் பங்கு மிளகுக்கு உண்டு. ஆஸ்துமாவால் அவதிப்படுபவர்கள் தினமும் ஐந்து மிளகை மென்று தின்பது நல்லது.
தினசரி உணவில் கருப்பு மிளகு சேர்த்துக்கொள்வது மிகவும் எளிது. தேநீர், காபி மற்றும் பிற சூடான பானங்கள் சுவை மற்றும் சுவையை அதிகரிக்க தூளாக்கப்பட்ட அல்லது முழு கருப்பு மிளகை சேர்க்கலாம்.
தமிழ்நாட்டு உணவுகளான பொங்கல், மிளகு ரசம், மிளகுக் கோழி வருவல், முட்டை வருவல், உருளைக்கிழங்கு பொரியல் ஆகியவற்றில் சுவைகூட்டும் பொருளாக மிளகு உபயோகப்படுத்தப்படுகிறது.
மிளகு, வரலாற்றுக்கு முந்தைய காலம்தொட்டே இந்தியச் சமையலில் முக்கிய தாளிப்புப் பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. மலேசியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் மிளகு தற்போது சிறந்து விளங்கினாலும், இந்தியாவில் உள்ள கேரளக் கடற்கரைப் பகுதி, நெடுங்காலமாகவே மிளகு உற்பத்தியில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது.
ளகு வணிகம் மிக லாபகரமானதாக இருப்பதனால், மிளகை 'கருப்புத் தங்கம்' என்று குறிப்பிடுகின்றனர்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -