Gut health Check: உடல் எடையை சீராக பராமரிக்க குடல் ஆரோக்கியம் முக்கியமானதா? நிபுணர்கள் சொல்வது என்ன?
குடல் ஆரோக்கியம் மிகவும் அவசியமானது.அதை சீராக வைத்திருந்தாலே நல்லது.
குடல் ஆரோக்கியமாக இருக்கும்போது, அமிலக் கழிவுப் பொருட்களை திறம்பட செயலாக்கி நீக்குவதன் மூலம் உடலின் pH அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது.குடல் நுண்ணுயிர் உடலில் உள்ள ஹார்மோன் அளவைக் கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
பாக்டீரியாக்கள் ஈஸ்ட்ரோஜன் உள்ளிட்ட ஹார்மோன்களை வளர்சிதைமாற்றம் செய்வதிலும் நீக்குவதிலும் ஈடுபட்டுள்ளன. குடல் பாக்டீரியாவின் சமநிலை சீர்குலைந்தால், அது ஹார்மோன் அளவை பாதிக்கும்,
நியூரான்களின் வலையமைப்பு மற்றும் மனநிலையை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டுள்ள செரோடோனின் மற்றும் டோபமைன் போன்ற நரம்பியக்கடத்திகளை உற்பத்தி செய்வதில் குடல் ஆரோக்கியத்தின் பங்கு அளப்பரியது என்பதால் அதை இரண்டாவது மூளை என்றும் மருத்துவ உலகம் குறிப்பிடுகிறது.
குடல் ஆரோக்கியத்திற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம், ஆரோக்கியமான எடையை அடைவதற்கும் பராமரிப்பதற்கும் உதவலாம்.
ஆரோக்கியமான முடி வளர்ச்சி, சரும பராமரிப்பு உள்ளிட்டவற்றிற்கு குடல் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுவது மிகவும் முக்கியமானது.