Roast Chicken: அசத்தலான சுவை மிகுந்த ரோஸ்ட் சிக்கன் செய்வது எப்படி?
இந்த கரம் மசாலா , மற்றும் புளி கரைசல் உள்ளிட்ட ஏனைய மசாலாக்களை பேஸ்ட் செய்து வறுத்த இந்த முழு கோழியானது அசைவ உணவை விரும்புவோருக்கு மிகவும் பிடித்ததாக இருக்கும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஓவனை முதலில் 425°Fக்கு நன்கு சூடாக்க விடவும். அதன் உள்ளே உள்ள கம்பிகள் நன்கு ஆரஞ்சு நிறத்தில் சூடாக வேண்டும்.
வெண்ணெய், புளி கரைசல், கரம் மசாலா, இலவங்கப்பட்டை, 1 தேக்கரண்டி உப்பு மற்றும் ½ தேக்கரண்டி மிளகு , இஞ்சி பூண்டு கலவை ஆகியவற்றை நன்கு கலந்து பேஸ்ட் செய்து கொள்ளவும்.
அந்தக் கலவையை கோழியின் மேல் பகுதி முழுவதும் மற்றும் உள்பகுதியிலும் கைகளால் நன்கு பூசவும். கோழியின் இரண்டு தொடை பகுதி மற்றும் இறக்கை பகுதியை இலகுவாக தளர்த்த வேண்டும். பின்னர் இறக்கைகளையும் , கால்களையும் கட்ட வேண்டும்.
கோழியின் மார்பு பகுதி நன்கு சூடாகும் வகையில் ஓவனில் வைத்து 175°F, 60 முதல் 80 நிமிடங்கள் வரை வறுக்கவும்.
0 நிமிடங்கள் அப்படியே விட்டு வைக்க வேண்டும். வெண்ணை, மசாலா கலவை நன்கு கலந்து ஒரு நறுமணம் மிக்க ரோஸ்ட் சிக்கன் சமையல் செய்யப்பட்டிருக்கும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -