Positivity tips : வீட்டில் நேர்மறை எண்ணங்களை அதிகரிக்க தூபத்துடன் இதை சேருங்க!
வீட்டில் சாம்பிராணி புகைப்போடுவது மிகவும் நல்லது. இந்த பழக்கம் காலம்காலமாக இருந்து வருகிறது.
வீட்டில் பண வரவை அதிகரிக்கும். இதன் நறுமணமும் வீட்டில் உள்ளவர்களின் மனதை அமைதியாக்க உதவுகிறது.
இந்த பதிவில், தூபம் போடும் பலனை பன்மடங்காக பெருக்க என்ன செய்ய வேண்டும் என்பதை பார்க்கலாம்.
முதலில் ஒரு அகலமான பானையில் வேப்பில்லை, கிராம்பு, கற்பூரம், பிரியாணி இலை சேர்த்துக்கொள்ள வேண்டும். இத்துடன் பொடி செய்த தூபத்தை சேர்க்க வேண்டும்.
இத்துடன் நெய் சேர்த்து, தீ மூட்ட வேண்டும். அவை நன்றாக எரிந்த உடன், அணைக்க வேண்டும்.
அந்த புகையை வீடு முழுவதும் பரப்ப வேண்டும். இப்படி செய்வதன் மூலம், வீட்டில் இருக்கும் எதிர்மறை ஆற்றல் வெளியேறி, நேர்மறையான ஆற்றல் நிலவும். இதனால், வீட்டில் வாழ்பவர்களுக்கு நல்லதே நடக்கும் என்பது நம்பிக்கை. இதை அலுவலகத்திலும் செய்யலாம், இதனால் தொழில் பெருகும்.