Poha Recipe : சத்தான சுவையான ப்ரேக்ஃபாஸ்ட் ரெசிபி தேடிட்டு இருக்கீங்காளா? இதோ இந்த போஹா ரெசிபி உங்களுக்காகவே!
போஹாவை ப்ரோட்டீன் நிறைந்த உணவு எனச் சொல்லலாம். சில நிமிடங்களில் செய்யக்கூடிய காலை உணவாகும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : அவல், வேர்க்கடலை, எலுமிச்சை சாறு, ஓட்ஸ், நெய், கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், பட்டாணி, கேரட், காளான் மற்றும் குடைமிளகாய்.
ஒரு சிறிய கிண்ணத்தில் போஹா மற்றும் ஓட்ஸ் இரண்டையும் ஊறவைக்கவும்.
கடாயில் நெய்யை சூடாக்கி கடுகு, கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். பின்னர் பட்டாணி, கேரட், காளான் மற்றும் குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.
அவை ஒன்றாகச் சமைத்த பின்னர் அவல் மற்றும் ஓட்ஸை வாணலியில் சேர்க்கவும். அடுப்பு குறைந்த தீயில் இருப்பதை உறுதி செய்து கொண்டு, அனைத்து பொருட்களையும் நன்கு கலக்கவும். ருசிக்கு உப்பு, மஞ்சள் மற்றும் பிற மசாலாப் பொருள்களையும் சேர்க்கவும்.
பின்னர், அதில் பயிர் வகைகள் மற்றும் வேர்க்கடலை சேர்க்கவும். இதனை நன்கு கிளறிய பின்னர் அவலை இளஞ்சூட்டில் சுமார் 8 நிமிடங்கள் சமைக்கவும். பின்னர் சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து சூடாக பரிமாறவும்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -