Healthy Lifestyle Tips : மருந்து மாத்திரை நாடாமல் என்றும் ஆரோக்கியமாக இருக்க டிப்ஸ் இதோ!
காலம் செல்ல செல்ல மருந்து மாத்திரைகளுடன் புது புது நோய்களும் கண்டுபிடிக்கப்படுகிறது. இது போன்ற சூழ்நிலையில் உடலை பாதுகாத்து கொள்வது மிக மிக அவசியம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஆரோக்கியமான வாழ்க்கை முறையை பின்பற்றுவதே இதற்கு தீர்வாக அமையும். அன்றாட வாழ்வில் பின்பற்ற வேண்டிய விஷயங்களை பற்றி பார்க்கலாம்.
தினமும் ஏதேனும் ஒரு பழம் சாப்பிட வேண்டும். இதை உணவுடன் சேர்த்து சாப்பிட கூடாது. தனியாகவே சாப்பிட வேண்டும். உணவு சாப்பிடுவதற்கு முன்னரோ பின்னரோ 1 மணி நேர இடைவேளை இருக்க வேண்டும்.
காலை, மாலை, இரவில் காய்கறி வகைகளை சேர்த்துக்கொள்ளவும். அத்துடன் 30 நிமிடம் உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
தினமும் 7-8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் 10 நிமிடம் இளம் சூரிய ஒளியை பெற வேண்டும் அத்துடன் வெறும் காலில் புல்வெளியில் 5 நிமிடம் நடக்க வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -