Homemade Bournvita : இவை இருந்தால் போதும்..இனி வீட்டிலேயே போர்ன்விட்டா செய்யலாம்!
பலருக்கும் போர்ன்விட்டாவை மிகவும் பிடிக்கும். மற்ற பானங்களில் இருக்கும் சுவையை காட்டிலும் இதன் சுவை தனித்துவமாக இருக்கும்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : 1 கப் தாமரை விதைகள், அரை கப் பாதாம் (தோல் நீக்கப்பட்டது), அரை கப் ஓட்ஸ், 2 டேபிள் ஸ்பூன் ஆளி விதைகள், 2 டேபிள் ஸ்பூன் கொக்கோ பவுடர் (இனிப்பு சுவை இல்லாதது), 2 டேபிள் ஸ்பூன் பொடி வெல்லம்.
முதலில், தாமரை விதைகள், பாதாம், ஓட்ஸ், ஆளி விதைகளை ஒரு பாத்திரத்தில் எண்ணெய் சேர்க்காமல் நன்றாக வறுத்து கொள்ளவும்.
இவை ஆறியவுடன் மிக்ஸியில் போட்டு போர்ன்விட்டா பதத்தில் அரைத்து எடுக்க வேண்டும்.
இத்துடன் கொக்கோ பவுடர், பொடி வெல்லம் சேர்த்து நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான்.
இந்த கலவைய காய்ச்சிய பாலில் சேர்த்து நன்றாக கலக்கி பருகலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -