Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Health Tips: ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகள் பற்றி தெரியுமா? இதோ லிஸ்ட்!
உடலின் பல்வேறு செயல்பாடுகளுக்கு கொழுப்புச் சத்து அவசியமாக இருக்கிறது. ஆரோக்கியமான கொழுப்புச் சத்துகள் உள்ள உணவுகளை டயட்டில் சேர்ப்பது மிகவும் நல்லது. ஆலிவ் எண்ணெய் - இதில் ஆன்டி-ஆக்ஸிடண்ட் நிறைந்துள்ளது. இதிலும் மோனோசாச்சுரேட்டட் கொழுப்பு நிறைந்துள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமீன் வகைகள் - மீன் வகைகளில் ஒமேகா -3 சத்தும் ஆரோக்கியமான கொழுப்பு உள்ளது. புரோட்டீன், வைட்டமின் டி இதில் நிறைந்துள்ளதால் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லது.
சியா சீட்ஸ் - சியா விதைகளில் ஒமேகா -3, ஆன்டி= ஆக்ஸிடண்ட், நார்ச்சத்து உள்ளிட்டவை இருக்கிறது. இது இதய பாதுகாப்பை மேம்படுத்தும்.
நட்ஸ் - பாதாம், முந்திரி, பால்நட், நிலக்கடலை உள்ளிட்ட நட்ஸ் வகைகளில் புரோட்டீன், நார்ச்சத்து , மெக்னீசியம் உள்ளிட்ட ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. வைட்டமின் இ சத்தும் மிகுந்துள்ளது.
அவகாடோ - இதில் மோனோசாச்சுரேடட் கொழுப்பு நிறைந்துள்ளது. இது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை கரைக்க உதவும். அதோடு, இதய ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -