Fish Fry:சுவையான சங்கரா மீன் வறுவல் இப்படி செய்து பாருங்க - ரெசிபி இதோ!
தேவையான பொருட்கள்: சங்கரா மீன் - 4, இஞ்சி பூண்டு விழுது - 2 முழு தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 4 தேக்கரண்டி, உப்பு - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசீரக தூள் - 1 தேக்கரண்டி, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, கடலை மாவு - 2 1/2 மேசைக்கரண்டி , எலுமிச்சைபழச்சாறு - 1/2 பழம், தண்ணீர், எண்ணெய் - பொரிப்பதற்கு , வெங்காயம் - 1 மெல்லியதாக நறுக்கியதும், பச்சை மிளகாய் - 3 கீறியது, கறிவேப்பிலை.
செய்முறை: ஒரு பாத்திரத்தில் இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு, தனியா தூள், சீரக தூள், மிளகு தூள், கடலை மாவு, எலுமிச்சை பழச்சாறு, தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
அடுத்தது மீனை நன்கு கழுவி தண்ணீர் வடிந்த பிறகு மீனின் இரண்டு பக்கமும் கத்தியால் சில கீறல்கள் போடவும்.
அடுத்தது கலந்து வைத்த மசாலாவை மீனின் இரண்டு பக்கமும் நன்கு தடவி 30 நிமிடம் ஊறவிடவும்.
அடுத்தது கடாயில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மீனை சேர்த்து இரு பக்கமும் 3 நிமிடம் பொரித்து எடுக்கவும்.அடுத்தது அதே கடாயில் வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். அதன்பிறகு வதக்கிய வெங்காயத்தை மீனின் மீது தூவிவிட்டு பரிமாறினால் சுவையான சங்கரா மீன் வறுவல் தயார்!
- - - - - - - - - Advertisement - - - - - - - - -