Variety Food :தினசரி உணவில் சேர்க்க வேண்டிய ஆரோக்கியமான கலவை உணவுகள்
அவகேடோ அதன் இனிப்பு சுவையை அனுபவிக்க விரும்பினாலும், கீரை மற்றும் கோஸ் போன்ற இலை கீரைகளுடன் சேர்த்து சாலடாக சாப்பிடலாம்.
1 டீஸ்பூன் நெய்யுடன் காபியை சேர்த்து குடிப்பது வித்தியாசமான கலவையாகத் தோன்றலாம், பல ஆரோக்கிய நன்மைகளைக் நிறைந்துள்ளது. காபியில் முக்கியமாக காஃபின், டானின், கார்போஹைட்ரேட் மற்றும் புரதங்கள் உள்ளன. இவை நீண்ட கால மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனைகளை சரி செய்யலாம் என்று ஆயிர்வேதம் கூறுகிறது.
டார்க் சாக்லேட் நல்ல ஆரோக்கிய நன்மைகளை அளித்தாலும், சாக்லேடின் அதிகப்படியான சர்க்கரை குளுக்கோஸ் அளவை அதிகரிக்கும். இதனோடு புரதங்களின் நல்ல ஆதாரமான பாதாம் பருப்புகளுடன் இணையும் போது சர்க்கரை அளவைக் குறைக்கலாம்.
தயிரில் சர்க்கரை போன்ற இனிப்புகள் அல்லது உப்பு சேர்த்து சாப்பிட்டிருப்போம் மாறாக, தேன் மற்றும் தயிர் சேர்த்து சாப்பிடும் போது குடலில் பாக்டீரியா வளர்ச்சியை அதிகரிக்கலாம்.
பழங்கள் மற்றும் உலர்ந்த பழங்கள் சேர்த்து எடுத்து கொள்ளும் போது செரிமான நொதிகள் தூண்டப்படுகின்றன, ஒரு ஆப்பிள் அல்லது வாழைப்பழத்தை ஒரு கைப்பிடி பாதாம், பிஸ்தாவுடன் சேர்த்து ஷேக் ஆக குடிக்கலாம்
பீன்ஸில் லைசின், டைரோசின் மற்றும் ஃபைனிலாலனைன் போன்ற அத்தியாவசிய அமினோ அமிலங்கள் அதிக அளவில் உள்ளன