Health Tips: சாதம் சாப்பிடுவதும் ஆரோக்கியம் தரும்! அரிசியை வேக வைக்க சில டிப்ஸ்!
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நினைப்பவர்கள், நிர்வகிக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் வெள்ளை சாதம் சாப்பிடுவது ஆபத்தானது என்று நம்பப்படுகிறது. பலரும் இதையே பரிந்துரைக்கின்றனர். ஆனால், ஊட்டச்சத்து நிபுணர்கள், ஆய்வுகள் சாதம் சாப்பிடுவது ஆபத்தானது இல்லை என்று தெரிவிக்கின்றனர். அப்படியிருக்க, சாதத்தை வேக வைப்பது எப்படி என்று டிப்ஸை காணலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅரிசியை நன்றாக தண்ணீரில் ஊற வைத்து சுத்தம் செய்ய வேண்டும். 2 மணி நேரம் ஊற வைத்து வேக வைப்பது நல்லது. இதில் GI க்ளைகமிக்ஸ் இண்டெக்ஸ் என்று சொல்லும் ஜி.ஐ. குறைந்துவிடும்.
ஊற வைத்த அரிசியை வேக வைக்கும்போது அதில் பிரியாணி இலை சேர்க்கலாம். இது செரிமானத்திற்கும் உதவும். ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் சேர்க்கலாம். இதில் உள்ள் நல்ல கொழுப்பு அரிசியுடன் சேர்ந்துவிடும். இதனால் உடலில் ஊட்டச்சத்துக்கள் உறிஞ்சப்பட உதவும்.
ஆரோக்கியமாக இருக்க சாதம் எதிரி இல்லை. இப்படி வேக வைத்தால் இன்சுலின் சுரப்பு சீராக இல்லையென்றால் அது சீராகும் என்று சொல்லப்படுகிறது. சாதம் வேக வைக்கும்போது எலுமிச்சை சாறு சிறிதளவு சேர்க்கலாம்.
உதாரணமாக, ஒரு கப் அரிசியை இரண்டு கப் தண்ணீர் மூன்று முறை நன்றாக சுத்தம் செய்ய வேண்டும். சுத்தம் செய்த அரிசியை இரண்டு கப் தண்ணீர்ல் ஊற 2 மணி நேரம் வைக்கவும். இதில் பிரியாணி இலை சேர்த்து 5 நிமிடம் வேக வைக்க வேண்டும். அரிசி பொங்கி வரும் நிலையில், அடுப்பை மிதமான தீயில் வைக்கவும். இப்போது 15 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து வேக வைத்து சாதத்தை எடுக்கவும். .
- - - - - - - - - Advertisement - - - - - - - - -