AIDS Diet : எய்ட்ஸ் நோயாளிகளின் டயட்டில் இடம்பெற வேண்டிய உணவுகள்!
அனுஷ் ச | 08 Jun 2024 10:41 AM (IST)
1
உடலில் இருக்கும் நீர், வியர்வை மூலம் வெளியேறுவதால் தண்ணீர் அதிகமாக குடிக்க வேண்டும். குறிப்பாக இளநீர், மோர்,ஜூஸ் போன்றவற்றை அடிக்கடி குடிக்கலாம்.
2
எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி வாந்தி வரலாம். ஆகையால் எளிதில் செரிக்க கூடிய உணவுகளை கொஞ்ச கொஞ்சமாக எடுத்துக் கொள்ளலாம்.
3
எய்ட்ஸ் நோய் உள்ளவர்களுக்கு உதடு வறண்டு காணப்படும். அதனால் உணவுகளை தண்ணீர் பதத்தில் எடுத்துக்கொள்ளலாம். உதாரணத்திற்கு கஞ்சி சாதம், தயிர் சாதம், ரசம் சாதம் போன்றவற்றை உணவாக கொடுக்கலாம்.
4
புரதச்சத்து நிறைந்த உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். குறிப்பாக பயிர் வகைகள்,பருப்பு வகைகள், நட்ஸ், முட்டை , மீன் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளலாம் .
5
ஆன்டி ஆக்ஸிடென்ட் உணவுகள், வைட்டமின் சி கொண்ட சிட்ரஸ் பழங்களை சாப்பிடலாம். இவை உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம்.