Burn Belly Fat: தொப்பையை குறைக்க வேண்டுமா? ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்லும் மேஜிக் டீ?
என்ன செய்தாலும் தொப்பை குறையில்லை என்பது மிகவும் எரிச்சலூட்டும், இல்லையா? வீட்டில் உள்ளவற்றை வைத்து உடல் எடையை குறைக்கலாம் என்று பலர் சொல்வதை கேட்டிருப்பீர்கள் இல்லையா? அதில், வெந்தயம், மஞ்சள் இந்த இரண்டுக்கும் இடமுண்டு.
உணவியல் நிபுணர் மன்பிரீத் கல்ராவின் கூறுகையில், வெந்தயத்தில் அதிக நார்ச்சத்து உள்ளது. மேலும் இது இரத்ததில் உள்ள சர்க்கரையை மெதுவாக வெளியேற்ற உதவி புரியும். வெந்தயத்தில் உள்ள சத்துக்கள் உடலில் உள்ள நச்சுக்களையும், கெட்ட கொழுப்பையும் குறைக்க உதவுகிறது. இதை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடலில் மாற்றத்தை காணலாம். அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை குறைக்கும்.” என்று சொல்கிறார்.
வெந்தையத்தை பொடியாகவோ, வெந்தய நீராகவோ செய்து சாப்பிடலாம்.
மஞ்சளில் குர்குமின் உடல் பருமன் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளைக் கொண்டுள்ளது. இது உடலில் உள்ள கொழுப்பு திசுக்களின் வளர்ச்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. உயர் இரத்த சர்க்கரை, அதிக கொழுப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற உடல்நலப் பிரச்சினைகளின் அபாயத்தையும் குர்குமின் குறைக்கும் என்று அறிவியல் ஆராய்ச்சி கூறுகிறது.” என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர்.
அடுப்பில், ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிநிலை வர விடுங்கள். இப்போது, அதில் ஒரு டேபிள் ஸ்பூன் வெந்தயம் /வெந்தய பொடி, ஒரு டீ ஸ்பூன் மஞ்சள் சேர்த்து நன்றாக கொதிக்க விடுங்கள். மிதமான தீயில் 5-7 நிமிடங்கள் கொடுத்தவிட்டு இறக்கி வடிகட்டினால் ரெடி. இதோடு, தேன் அல்லது வெல்ல சர்க்கரை சேர்க்கலாம்.
வெந்தயம் உடலில் குளுக்கோஸ் இண்டாலரன்ஸ் மேம்படுத்த உதவுகிறது. இதோடு நார்ச்சத்து அதிகம் இருப்பதால் செரிமானப்பிரச்சனைக்கு ஒரு தீர்வாக உள்ளது. இரத்தத்தில் சர்க்கரை அளவைக்கட்டுப்படுத்தவும் உதவுகிறது.