Strawberry Benefits : மன அழுத்தத்தை போக்கும் ஃபீல் குட் பழம்.. ஆய்வுகள் சொல்வது இதுதான்!
ஆய்வு ஒன்றில் ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டால் நல்ல உணர்வு கிடைக்கும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நடுத்தர வயதினரிடையே இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பெரும்பாலாக அதிக எடை கொண்டவர்கள் பங்கேற்றனர். தங்களுக்கு அறிவாற்றல் திறன் குறைந்து வருவதாக கூறும் நபர்களிடமும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
12 வாரங்களுக்கு தொடர்ந்து ஸ்ட்ராபெர்ரி சாப்பிட்டு வந்துள்ளனர். ஸ்ட்ராபெர்ரியில் காணப்படும் அந்தோசயினின்ஸ் மூளையின் செயல்பாட்டிற்கு உதவும் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆய்வு தொடங்குவதற்கு முன்னும் பின்னும் அவர்களின் மனநிலை சோதிக்கப்பட்டுள்ளது. அவர்களிடையே சிறு மாற்றம் தெரிந்துள்ளது.
மன அழுத்தம் குறைந்துள்ளது எனவும் இந்தா ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அதனால், வைட்டமின் சி மற்றும் பாலிஃபீனால்கள் நிறைந்துள்ள இந்த ஸ்ட்ராபெர்ரியை அனைவரும் தங்களின் டயட்டில் சேர்த்துக்கொள்ளலாம்.