Health: காலை உணவை ஏன் தவிர்க்கக் கூடாது? அய்யய்யோ இவ்ளோ பிரச்சினை வருமா..?
காலை உணவை ஏன் தவிர்க்கக் கூடாது என்பதை எத்தனை முறை திரும்பத் திரும்பச் சொன்னாலும் எழுதினாலும் கூட தெரிந்தே பலரும் அதை ஸ்கிப் செய்வது தொடரத்தான் செய்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாலை உணவை ஒரு ராஜாவைப் போல் சாப்பிடுங்கள் என்று சொல்வார்கள். ஏன் தெரியுமா அந்த சாப்பாடும் அதில் கிடைக்கும் ஊட்டச்சத்தும் தான் நமது ஆரோக்கியத்தை. நம் நாளை நாம் எவ்வளவு சுறுசுறுப்பாக எதிர்கொள்ளப் போகிறோம் என்பதை நிர்ணயிக்கிறது.
காலையில் உணவில் கொழுப்புச் சத்து இருந்தால் அது மூளை மந்த நிலையை நீக்கும். சுறுசுறுப்புடன் உடலும் உள்ளமும் இயங்க வழிவகுக்கும். இதனால் காலை உணவை நீங்கள் கொழுப்பு நிறைந்த உணவாக உண்ணுதல் நல்லது
காலை உணவைப் புறக்கணித்தால் உங்களுக்கு டைப் 2 வகை சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு அதிகமாகும்
காலை எழுந்த பின்னர் உணவருந்தாமல் வேலைக்கும் செல்லும்பட்சத்தில் அந்த நாள் முழுவதும் ஒருவிதமாக எரிச்சல் உணர்வு மேலோங்க வாய்ப்பிருக்கிறது என்று கூறப்படுகிறது.
காலை உணவை தவிர்க்கும்போது தீவிரமான ஹங்கர் பேங்ஸ் ஏற்படும். அதாவது இனிப்பு நிறைந்த கொழுப்பு நிறைந்த உணவை அதிகம் உண்ணும் வாஞ்சையைத் தூண்டும்.
காலையில் சில நாட்களுக்கு காபிக்கு பதில் ஏதேனும் மூலிகை பானம் உட்கொள்ளலாம். கொழுப்பு கிடைக்கும் முறையை மாற்றிக் கொண்டே இருப்பது நல்லது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -