Health Tips:உடல், மனம் ஆரோக்கியமாக இருக்க.. இதை ஃபாலோ பண்ணுங்க!
சாப்பிடும்போது அதில் கவனம் செலுத்த வேண்டும். கொஞ்சம் நன்றாக சுவைத்து சாப்பிட வேண்டும். வேக வேகமாக சாப்பிட கூடாது. என்ன சாப்பிடுகிறோம் என்று கவனித்து சாப்பிட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appசாப்பிடாமல் இருப்பது, நேரத்திற்கு சாப்பிடாமல் இருப்பது உடலின் செரிமான மண்டலத்தின் இயல்பை பாதிக்கும். செரிமான நொதிகள் உற்பத்தியாவதில் பாதிப்பை ஏற்படுத்தும். சாப்பிடுவதற்கான நேரத்தை ஒதுக்கி அதை தினமும் கடைபிடிக்க வேண்டும்.
வாழ்க்கை முறை மாறிவருகிறது. அதற்கேற்றவாறு உடற்பயிற்சி செய்வது நல்லது. தினமும் குறைந்தது 30 நிமிடங்களாகவது உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய வேண்டும். இது செரிமான மண்டலம் சரியாக இயங்க உதவும். சீரான உடற்பயிற்சியும் சரிவிகித உணவும் உடல்நலன், மனநலன் இரண்டையும் ஆரோக்கியத்துடன் பேண உதவும்.
தொடர்ந்து மனசோர்வு நீடித்தால் மருத்துவரை அணுகவும். இல்லையெனில், அது செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டிருக்கும் உணவுகள், பொரித்த உணவுகள் சாப்பிடுவதை தவிர்க்கவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -