Mint Leaves Benefits : வெயில் காலத்தில் தினமும் நீங்கள் ஏன் புதினா இலைகள் சாப்பிட வேண்டும் தெரியுமா?
புதினா இலைகளில் நிறைந்திருக்கும் ன்டி - பாக்டீரியல் மற்றும் ஆன்டி - செப்டிக் பண்புகள் அஜீரண கோளாறுகளில் இருந்து நிவாரணத்தை அளிக்க உதவுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபருவ கால மாறுதலின் காரணமாக நம் உடலின் வெப்ப நிலையில் மாறுதல் ஏற்படும். இதனால் சளி தொற்றுகள் ஏற்படலாம். புதினா இலைகளை சாப்பிடுவதால் நீங்கள் அந்த தொல்லையில் இருந்து விடுபடுவீர்கள்.
பல் வலி உள்ளவர்கள் புதினா இலைகளை மென்று திண்ணலாம். இவ்வாறு செய்வதால் பற்களின் ஆரோக்கியம் பாதுகாக்கப்படுகிறது.
புதினா இலைகளில் உள்ள ஆன்டி - இன்பிளமேட்டரி பண்புகள் மற்றும் ஆன்டி - பாக்டீரியல் பண்புகள் சரும தொற்றுகளில் இருந்து பாதுகாக்க உதவுகிறது.
புதினா இலைகள் நம் உடலின் ஜீரணத்தை சீராக்கி மெட்டபாலிஸத்தை தூண்டுகிறது. இதனால் உடல் எடை குறைப்பிலும் புதினா இலைகள் பங்காற்றுகின்றன.
மேலும் காலை எழுந்த உடன் புதினா டீ குடிப்பதால் உங்கள் நாள் முழுவதும் புத்துணர்ச்சியோடு இருக்க முடியும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -