ப்ரோக்கோலி சாப்பிடுதில் உள்ள நன்மைகள் இவ்வளவா? தெரிஞ்சிக்கோங்க!
ப்ரோக்கோலி காய்கறியானது ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் இதர நன்மைகளை வழங்க கூடிய ஒரு காய்கறி வகையைச் சேர்ந்தது . இதை உட்கொள்வதன் மூலம் பல நன்மைகளை பெற முடியும் என கூறப்படுகிறது. குறிப்பாக கண் ஆரோக்கியம், இதய ஆரோக்கியம் மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்கு இது உகந்ததாக பார்க்கப்படுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appப்ரோக்கோலியில் நார்ச்சத்து, வைட்டமின் சி, வைட்டமின் கே, இரும்பு மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் அதிகம. புலாவ், குருமா உள்ளிட்டவை செய்து சாப்பிடலாம்.
ப்ரோக்கோலியில் கிட்டத்தட்ட 90% நீர், 7% கார்ப்ஸ், 3% புரதம் மற்றும் கிட்டத்தட்ட கொழுப்பு இல்லை என உணவு சம்பந்தமான உடல்நலம் குறித்து தகவல்களை தெரிவிக்கும் ஹெல்த்லைன் வலைப்பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோய் எதிர்ப்பு ஆரோக்கியத்தை அதிகரிக்கும். தோல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானத்திற்கு உதவும்
நீரிழிவு அபாயத்தைக் குறைக்கும். இருதய ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தும்
ப்ரோக்கோலியில் ஜீரணிக்கக்கூடிய கார்போஹைட்ரேட்டுகள் குறைவாக உள்ளது, ஆனால் போதுமான அளவு நார்ச்சத்து வழங்குகிறது, இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் பல்வேறு நோய்களின் அபாயத்தைக் குறைக்கிறது எனவும் ஹெல்த்லைன் வலைதள பக்கம் தெரிவித்துள்ளது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -