Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
Ayurvedic Health Tips : உங்கள் 80 சதவிகிதமான பிரச்சினைகளை போக்கும் 8 பழக்கங்கள்!
அதிகாலையில் எழுந்துக்கொள்வதால் அனைத்து உறுப்புகளும் சீராக இயங்கும், மனம் ரிலாக்ஸாக இருக்கும், ஹார்மோன்கள் சீராக சுரக்கும், வாதம் சீராக இருக்கும். அத்துடன் உங்கள் நாளை திட்டமிட்டபடி தொடங்கலாம்
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appநீங்களே உங்கள் உடலுக்கு மசாஜ் செய்வதால் உடல் வலி நீங்கும், சருமம் பொலிவாகும், நல்ல தூக்கம் வரும், வயதாகும் அறிகுறிகள் தோன்றாது, கண் பார்வையை மேம்படுத்தும்
மூக்கின் வழியாக எண்ணெயை (அனு தைலம்) செலுத்துவதால் மூளை ஆரோக்கியம் மேம்படும். சருமம், தோள்பட்டை, முகம், கழுத்து அனைத்தும் பளபளக்கும்
ஆயில் புல்லிங் செய்வதால் பற்களும் ஈறும் சுத்தமாக இருப்பதுடன் அவை வலுவாகும், முகத்தில் உள்ள தசைகளை வலுவாக்கும், வாய் துர்நாற்றத்தை போக்கும்.
இரவு உணவை சாப்பிட்ட பின் வஜ்ராசனம் செய்து 100 ஸ்டெப்ஸ் நடந்தால், ஜீரண கோளாறுகள் ஏற்படாது. மலச்சிக்கல் வராது, மாதவிடாய் வலியை குறைக்க உதவும், முதுகு வலி குறைக்க உதவும்
பாதங்களுக்கு மசாஜ் செய்வதால் பாதங்கள் வலுவாகும், நல்ல தூக்கம் வரும், மூட்டுகள் வலுவாகும், வாயுவை கட்டுக்குள் வைக்கும்.
உடற்பயிற்சி செய்வதால் மனதும் உடலும் சமநிலையாக இருக்கும், உறுப்புகள் சீராக இயங்கும், உடலை டீ டாக்ஸ் செய்யும்
உணவு முறை : உணவு சற்று இதமான சூட்டில்தான் இருக்க வேண்டும். பேசிக்கொண்டும் சிரித்துக்கொண்டும் சாப்பிட கூடாது. மிகவும் பொறுமையாகவோ மிகவும் வேகமாகவோ சாப்பிடக்கூடாது. அளவாகவே சாப்பிட வேண்டும். முன் சாப்பிட்ட உணவு ஜீரணமான பின்னரே, அடுத்த உணவை சாப்பிட வேண்டும். வெவ்வெறு தன்மைகள் கொண்ட உணவை ஒன்றாக சாப்பிட கூடாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -