இத்தனை உப்பு வகைகள் இருக்கா? எந்த வகை உப்பு ஆரோக்கியமானது?
Continues below advertisement

உப்பு
Continues below advertisement
1/6

டேபிள் உப்பு: டேபிள் சால்ட் நாம் அன்றாட உணவில் பயன்படுத்தப்படும் உப்பு. இதில் அயோடின் மற்றும் ஆன்டிகேக்கிங் செய்ற்கையா சேர்க்கப்படுகின்றன. இது சுரங்க வைப்புகளிலிருந்து பிரித்தெடுக்கப்படுகிறது. இது சுவையூட்டும், சமையல் மற்றும் பேக்கிங் ஒரு நல்ல தேர்வாகும்.
2/6
கோஷர் உப்பு: கோஷர் உப்பு குறைவாக சுத்திகரிக்கப்படுகிறது. இது தூய சோடியம் குளோரைடு என்று அழைக்கப்படுகிறது. மேலும், இது அயனியாக்கம் செய்யப்படவில்லை. எனவே உணவுகளை சுவையூட்ட சேர்ப்பது நல்லது என்று கூறப்படுகிறது.
3/6
கடல் உப்பு: கடல் நீரை ஆவியாக்குவதன் மூலம் இந்த உப்பு தயாரிக்கப்படுகிறது. இதில் இயற்கையிலேயே தாதுக்கள் நிரம்பியது. டேபிள் சால்ட் பயன்படுத்துவதைவிட இதை உணவில் அதிகமாக சேர்க்கலாம்.
4/6
இளஞ்சிவப்பு உப்பு: இந்த உப்பு இமயமலைக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து சேகரிக்கப்படுகிறது. இதில் சோடியம், இரும்பு மற்றும் துத்தநாகம் போன்ற தனிமங்கள் உள்ளன. டேபிள் உப்பை விட இளஞ்சிவப்பு உப்பு அதிக உவர்ப்பு கொண்டது. எனவே, சமையலுக்கு குறைந்த அளவில் பயன்படுத்தினாலே போதுமானது.
5/6
கருப்பு உப்பு : கருப்பு உப்பு இமயமலையில் இருந்து தயாரிக்கப்படுகிறது. அங்கு எரிமலை பாறையில் இருந்து ஒரு வகை பாறை உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்த உப்பில் இரும்பு, மெக்னீசியம் மற்றும் கால்சியம் உள்ளது. இது ஒரு கடுமையான வாசனை மற்றும் சுவை கொண்டது.
Continues below advertisement
6/6
எந்த வகையான உப்பு என்றாலும் அதை அளவோடு பயன்படுத்துவது நல்லது. சோடியம் குறைந்த அளவு உணவில் சேர்ப்பது உடலுக்கு நல்லது. பொட்டாசியம் குளோரைடு நிறைந்த உப்பு அன்றாட சமையலில் உபயோகிப்பது நல்லது என உலக சுகாதார அமைப்பும் தெரிவித்துள்ளது.
Published at : 30 Jan 2025 03:24 PM (IST)