Drinking water Benefits : எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடிப்பதால் என்னென்ன நன்மைகள் கிடைக்கும்?
தண்ணீர் என்பது இந்த உலகத்தில் உள்ள அனைத்து உயிரினங்களுக்கும் தேவையான ஒன்று. மனிதர்கள் ஒரு நாளைக்கு 2-3 லிட்டர் தண்ணீர் குடிப்பது அவசியம். தண்ணீர் குடிக்கும் அளவும் நபருக்கு நபர் வேறுபடும். தற்போது, எந்தெந்த நேரத்தில் தண்ணீர் குடித்தால் என்னென்ன நன்மை கிடைக்கும் என்பதை பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாலையில் எழுந்தவுடன் தண்ணீர் குடித்தால் வயிறு சுத்தமாகும். மெட்டபாலிச இயக்கம் தூண்டப்படும்
சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன் தண்ணீர் குடிப்பது ஜீரண மண்டலத்திற்கு உதவி செய்யும். உணவு சாப்பிடும் போதோ, சாப்பிட்ட உடனோ தண்ணீர் குடிக்க கூடாது. உணவு சாப்பிட்டு ஒரு மணி நேரம் ஆன பின்னரே குடிக்க வேண்டும்
மதிய வேளையில் குடித்தால், சோர்வான மனநிலை குறையும். அத்துடன் ஒரு வித புத்துணர்ச்சியும் கிடைக்கும்
உடற்பயிற்சி செய்வதற்கு முன்னும் பின்னும் தண்ணீர் குடித்தால் உடல் நீரேற்றமாக இருக்கும்.
தூங்குவதற்கு முன் தண்ணீர் குடிப்பதும் நல்லது. ஆனால், இரவில் அதிக தண்ணீர் குடிக்க வேண்டாம். தாகம் எடுக்கும் போது கட்டாயமாக தண்ணீர் குடியுங்கள். உங்களின் உடல் கொடுக்கும் சிக்னலை மறுக்க வேண்டாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -