லெஜண்ட் சரவணனனை வைத்து படம் இயக்க போகும் எதிர்நீச்சல் துரை செந்தில்குமார்!
எதிர்நீச்சல்,கொடி, பட்டாஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய துரை செந்தில்குமார் தற்போது புதிய திரைப்படத்தை இயக்க உள்ளார்.
இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கிய முதல் திரைப்படமான எதிர்நீச்சல் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது.
எதிர்நீச்சல் திரைப்படத்தில் நடித்த சிவகார்த்திகேயனுக்கும் எதிர்நீச்சல் திரைப்படம் தற்போது வரை பெயர் சொல்லும் படமாக இருக்கிறது.
இதன் பிறகு நடிகர் தனுஷை வைத்து இவர் இயக்கிய கொடி மற்றும் பட்டாசு திரைப்படங்கள் சரியாக ஓடாமல் தோல்வி படமாக அமைந்தது.
இந்நிலையில், இயக்குநர் துரை செந்தில் குமார், லெஜண்ட் சரவணனை வைத்து புதிய படத்தை இயக்க போவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. லெஜெண்ட் சரவணன் இதற்கு முன்பு லெஜெண்ட் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருந்தார்.
லெஜண்ட் திரைப்படத்தில் சரவணன் நடிப்பை இணையவாசிகள் ட்ரோல் செய்தனர். எனினும் அவை யாவையும் கண்டு கொள்ளாமல் தற்பொழுது அடுத்த படத்திற்கு லெஜெண்ட் சரவணன் தயாராகி வருகிறார்.