Health Tips: தினம் ஒரு பழம் ஏன் சாப்பிட வேண்டும்? ஹெல்த் டிப்ஸ் இதோ!
உணவில் பழங்கள் இருப்பது அதைவிட முக்கியம். அன்றாடம் ஏதேனும் ஒரு பழத்தை சாப்பிட வேண்டும். ஏன் என்று கேட்கிறீர்களா?
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமஞ்சள் நிறதிலுள்ள பழங்களில் கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, போலிக் அமிலம் போன்றவை நிறைந்துள்ளன. இதனால் எலும்புகள் பலப்படும். சிறுநீரகக் கோளாறுகள் நீங்குவதோடு, ரத்தம் சுத்தமடையும். மன அழுத்தத்தைப் போக்கும். ஜீரண சக்தியைக் கூட்டும் தன்மை உடையது.
சிவப்பு நிற பழங்களில் வைட்டமின் ஏ சத்து அதிகம். இவை ரத்தத்தை விருத்தி செய்யும். ரத்தத்தில் உள்ள சிவப்பணுக்களை அதிகரிக்கும் தன்மை கொண்டது, கண்பார்வை தெளிவுறச் செய்யும் சக்தி சிவப்பு நிற பழங்களுக்கு உண்டு. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
பழவகைகள் நார்ச்சத்து நிறைந்தவை. அதனால் அன்றாடம் ஒரு பழவகை சாப்பிடுவதால் உடலுக்குத் தேவையான நார்ச்சத்து கிடைக்கும். பழங்களில் இருந்து பெறப்படும் நார்ச்சத்து வயிறை சீராக இயங்க வைக்கும்.
அன்றாடம் ஒரு பழம் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். எப்படி எனக் கேட்கிறீர்களா? பழங்களில் உள்ள ஃப்ளாவனாய்ட்ஸ், ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ், விடாப்பிடியாக படிந்திருக்கு கொழுப்பைக் கரைக்கும்.
பழங்களில் ஆன்ட்டி ஆக்ஸிடன்டுகள் இருப்பதால் அவை உடலின் நச்சுத்தன்மையை நீக்கும். நுரையீரல், கல்லீரல், சிறுநீரகம், குடல் போன்ற உடல் உறுப்புகளைப் பாதுகாக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -