Health Tips:தினமும் ஒரு துண்டு இஞ்சி சாப்பிடுவதில் உள்ள நன்மைகள் தெரியுமா?
இஞ்சி செரிமானத்திற்கு உதவும். இஞ்சி, மிளகு, இரண்டையும் அரைத்து சாப்பிட செரிமான பிரச்சனைகள் ஏற்படாது. தலைசுற்றல் வாந்தி மயக்கம் பிரச்சனை இருந்தால் இஞ்சி சாறு குடித்துவர குணமாகலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇஞ்சியில் காம்ஃபின், ஜின்ஜிபெரி, ஃபெளலாட்ரின் ஆகியவை உள்ளதால் இது புத்துணர்ச்சி அளிக்கும். இதோடு புதினா சேர்த்து டீ அருந்தாலாம். உடலுக்கு தெம்பு கிடைக்கும். இஞ்சி சாறில், வெல்லம் கலந்து சாப்பிட வாதக் கோளாறு நீங்கி பலம் ஏற்படும்.
இதய ஆரோக்கியத்திற்கு இஞ்சி மிகவும் நல்லது. இதயதுக்கு ரத்தத்தை ஒழுங்காக அனுப்ப உதவுகிறது. சளி, இருமல் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு இஞ்சி சாறு குடிகலாம்.
சமையலில் சிறிய துண்டு அளவு இஞ்சி சேர்ப்பது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கப்பதுடன் குடல் ஆரோக்கியமாக இருக்கும். இஞ்சி செரிமானத்திற்கு உதவுவதால் பசியை தூண்டும். பசி எடுக்கவில்லை என்பவர்கள் இஞ்சி சாறு குடித்து வர சரியாகும்.
வாரத்தில் இரண்டு நாட்கள் இஞ்சி துவையல் செய்து சாப்பிடலாம். இஞ்சி, உடல் எடையை நிர்வகிக்க உதவும். உணவு சாப்பிட்டுவிட்ட திருப்தி உணர்வைத் தரும் என்பதால் நீங்கள் அதிகமாக சாப்பிட வேண்டிய அவசியம் ஏற்படாது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -