அளவுக்கு அதிகமாக சாப்பிடுகிறீர்களா? என்ன ஆகும் தெரியுமா? இதை கவனிங்க!
அதிகமாக சாப்பிடுவதால் உடல் எடை அதிகரிக்கும். வயிற்றில் கொழுப்பு சேரும். அதிகமான கலோரிக்கள் உடலில் பல்வேறு உபாதைகளை ஏற்படுத்தும் எனக் கூறுகிறார் ஊட்டச்சத்து நிபுணார் லவ்நீத் பத்ரா.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஅதிகமாக உணவு உண்ணுதலுக்கும் உடல் எடை அதிகரிப்பதற்கும் நேரடியாக தொடர்பு உள்ளது. மேலும் வயிற்றைச் சுற்றி மடிப்புகளாக சதை போடும்.
அளவுக்கு அதிகமாக உணவு உண்பதால் நமது பசி மேலாண்மை பாதிக்கப்படும். வயிறு இறுக்கமாக இருக்கும். வளர்சிதை மாற்றத்தின் வேகத்தைக் குறைக்கும்.இதனால் பசி நேரம் காலம் கருதாமல் ஏற்படும்.
அதிகமாக உணவு உண்பது லைஃப்ஸ்டைல் நோய்களுக்கு வழிவகுக்கும். கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்யும். இதனால் இதய நோய்கள் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு அதிகமாகும்.
அளவுக்கு அதிகமாக உணவு உண்பதால் மூளை பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உருவாகும். மேலும் ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும். அது மூளையை பாதிக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -