Diwali 2024:பண்டிகை காலத்தை கொண்டாட ஆரோக்கியம் நிறைந்த கோதுமை லட்டு! ரெசிபி இதோ!
ஆட்டா லட்டு என்பது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக் கூடியது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபாதாம், பூசணி விதை, உலர் திராட்சை, முந்திரி ஆகியன தேவை. அத்துடன் கொஞ்சம் ஒமம், இஞ்சிப் பொடி எடுத்துக் கொள்ளுங்கள். ஓமம் வைட்டமின் சி கொண்டது. அதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
அப்புறம் லட்டு செய்ய சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்க்கவும். வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்து உடலுக்கு வலு சேர்க்கும். இதுதவிர கோந்து எனப்படும் ஒருவகை மரப்பிசினும் தேவை.
முதலில் எல்லா ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், மற்றும் விதைகளை நான் ஸ்டிக் பேனில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும். பின்னர் ஒரு பேனில் நெய் ஊற்றி கோதுமை மாவை வறுத்தெடுக்கவும். கோதுமை நிறம் மாறும் வரை வறுத்தெடுத்து அதை ஆற வைக்கவும்.
இப்போது ஒரு பவுலில் கோதுமை மாவு, நொறுக்கிய வெல்லம், பொடித்துவைத்த பொருட்கள் என எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கைகளில் நெய் தடவிக் கொண்டு மாவைப் பிசைந்து லட்டு பிடித்துக் கொள்ளவும். இது சுவையானது மட்டுமல்ல சத்தானதும் கூட. இப்படி ஒரு இனிப்பை செய்து கொடுத்துப் பாருங்கள் வீடே உங்களுக்கு அடிமையாகிக் கிடக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -