வாழைப்பழ மில்க்ஷேக் ஆரோக்கியம் நிறைந்ததா? - நிபுணர்கள் சொல்வது என்ன?
வாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிட ருசியாக இருந்தாலும் ஆனால் அது ஆரோக்கியமானது அல்ல. அது பல்வேறு உடல்நல பிரச்சனைகளை ஏற்படுத்தலாம். வாழைப்பழம் மற்றும் பால் இரண்டையும் சாப்பிடுவது நல்லதா கெட்டதா? சிலர் வாழைப்பழத்தை பாலுடன் சேர்த்து ஆரோக்கியமானது அல்ல.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவாழைப்பழத்துடன் பால் சேர்த்து சாப்பிடுவது ஏன் நல்லது என ஆயுர்வேத மருத்துவம் சொல்வதை காணலாம். ஒவ்வொரு உணவுக்கும் அதன் சொந்த சுவை, செரிமானத்திற்கு பிறகான விளைவு, ஓர் உணவை சாப்பிடுவது அது உடலுக்கு குளிர்ச்சியை தருமா அல்லது வெப்பத்தை அதிகப்படுத்துமா என்பது ஒவ்வொரு உணவுக்கு வேறுபடும்.
அதற்கு ஏற்றவாறு சாப்பிட வேண்டும். ஆயுர்வேத மருத்துவத்தின் அடிப்படையில், பால் வாழைப்பழம் இரண்டையும் ஒன்றாக சேர்த்து சாப்பிட கூடாது என்று பரிந்துரைக்கிறது.
வசந்த் லாட் எழுதிய ’The Complete Book of Ayurvedic Home Remedies, A Comprehensive Guide to the Ancient Healing of India’ என்ற புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவலின்படி, பழங்கள் மற்றும் பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது நல்லது அல்ல என்று குறிப்பிட்டுள்ளது.
வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிடுவது அதிலிருந்து டாக்ஸின்ஸ் வெளியாகி சைனஸ் உள்ளிட்ட பிரச்சனையை ஏற்படுத்திவிடும். இதனால் சளி, இருமல் ஆகியவை ஏற்பட வாய்ப்புள்ளது. செரிமான மண்டலத்தில் சீரற்ற நிலையை உருவாக்கிவிடும்.
எனவே, வாழைப்பழம், பால் இரண்டையும் சேர்த்து சாப்பிட கூடாது. இது உடல் நல பிரச்சனைக்கு ஏற்படுத்தும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். பால், வாழைப்பத்தை தனித்தனியே சாப்பிட வேண்டும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -