Healthy Diet:முளைக்கட்டிய பயிறு - வேக வைத்து சாப்பிடலாமா? எதில் நன்மை அதிகம்? இதைப் படிங்களேன்!
சிறுதானிய பயறு வகைகள் முளைக்கட்டி சாப்பிடுவது உடலுக்கு மிகவும் நல்லது. ஏனெனில், முளைக்கட்டும்போது அதில் புரோட்டீன் அளவு அதிகமாக இருக்கும். ஊறவைத்து முளைக்கட்டும்போதும் அதை வேகவைப்பது நல்லதா உள்ளிட்ட கேள்விகள் எழும். அதற்கான விளக்கத்தை காணலாம்.
முளைக்கட்டிய பயறு வகைகளை அப்படியே சாப்பிடுவதும் வேகவைத்து சாப்பிடுவது இரண்டிலும் நன்மைகளும் உள்ளது. தீமையும் உண்டு.
முளைக்கட்டிய பயறில் ஃபைபர் அதிகம் உள்ளது. இதனால் ஆரோக்கியம் அதிகம் என்று சொல்லப்படுகிறது. இது செரிமான மண்டலத்தை சீராக செயல்பட உதவும். திருப்தியான உணர்வை தரும். இதனால் அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வு ஏற்படாது.
முளைக்கட்டிய பயறு வகைகளில் குறைந்த கலோரி, குடலுக்கு நன்மை பயக்கும் பாக்டீரியாக்கள், வைட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இருப்பினும், இதை வேகவைக்காமல் சாப்பிடுவது பலருக்கும் ஒவ்வாமையை ஏற்படுத்தும். இதில் இருக்கும் E. coli and Salmonella உள்ளிட்ட பாக்டீரியாக்கள் சிலருக்கு வயிற்று வலி, வாந்தி, உள்ளிட்ட உபாதைகளை ஏற்படுத்தக்கூடும். எனவே இப்படியான பிரச்சனை இருப்பவர்கள் முளைக்கட்டிய பயிறு வகைகளை வேக வைத்து சாப்பிடுவது நல்லது.
முளைக்கட்டிய பயறு வகைகள் சாப்பிடும்போது செரிமானம் ஆக நேரம் எடுக்கும். சிலருக்கு செரிமான சிக்கல்களை உண்டாக்கும். எனவே உங்கள் உடல் என்ன சொல்கிறதோ அதற்கு ஏற்றவாறு தேர்வு செய்து சாப்பிட வேண்டும்.