ஆரோக்கியமான தலைமுடி வளர்ச்சிக்கு உதவும் உணவு -இதை தெரிஞ்சிக்கோங்க!
தலைமுடி உதிராமல் வளர வேண்டும் என்று விரும்புபவர்கள் ஊட்டச்சத்து மிகுந்த உணவுகளை சாப்பிட வேண்டும். இரும்புச்சத்து, ஜிங்க்,பயோடின் உள்ளிட்டவை நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஃப்ளாக்ஸ் சீட், வெள்ளிரி விதைகள், சூரியகாந்தி விதைகள், எள் உள்ளிட்டவைகள் முடி உதிர்வை தடுத்து தேவையான போஷாக்கைத் தரும். இவற்றை எண்ணெய் சேர்க்காமல் வறுத்து டப்பாவில் வைத்து கொள்ளலாம். ஸ்நாக்ஸ் நேரத்தில் சாப்பிடலாம்.
இல்லையெனில், இந்த சீட் வகைகளை ஓட்ஸ் உடன் ஊறவைத்து சாப்பிடலாம். சியா விதைகளையும் இதோடு சேர்த்து சாப்பிடலாம். அவை முடி ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்.
பூசணி விதை, வெள்ளரி விதை, சியா விதை, எள்ளு ஆகியவற்றில் மெக்னீசியம், ஒமேகா -3 கொழுப்பு, இரும்புச்சத்து, காப்பர் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன.
ஊட்டச்சத்தான உணவோடு, உடற்பயிற்சி, மனசோர்வு, மன உளைச்சல் நிர்வாகம் ஆகியவற்றை பின்பற்ற வேண்டும். வாரத்திற்கு இரண்டு நாள் தலை குளிப்பது, அழுக்கு இல்லாத தலையணை உறை பயன்பாடு, பல் அகன்ற சீப்பு பயன்படுத்துவது ஆகியவை உதவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -