Spicy Schezwan Sauce: இனி செஸ்வான் சாஸ் வீட்டிலேயே எளிதாக தயாரிக்கலாம் - இதோ ரெசிபி!
செஸ்வான் சாஸ் பிடிக்கும் என்பவர்கள் இனி கவலையே இல்லாமல் வீட்டிலேயே செய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஎண்ணெய் - 1 தேக்கரண்டி பூண்டு - 1 மேசைக்கரண்டி நறுக்கியது இஞ்சி - 1/2 மேசைக்கரண்டி நறுக்கியது காய்ந்த மிளகாய் விழுது - 2 தேக்கரண்டி உப்பு - தேவையான அளவு மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி சோயா சாஸ் - 1 தேக்கரண்டி சில்லி சாஸ் - 2 தேக்கரண்டி சர்க்கரை - 1 தேக்கரண்டி வினிகர் - 1 தேக்கரண்டி.. இதெல்லாம் இருந்தால் போதும்.
பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, இதில் பூண்டு, இஞ்சி, சேர்த்து வதக்கவும். பூண்டு பொன்னிறமானதும், இதில் சிவப்பு மிளகாய் விழுது சேர்த்து வதக்கவும். தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறவும்.
இதில் தண்ணீர் சேர்த்து 2 நிமிடம் கொதிக்கவிடவும். குறைந்த தீயில், சோயா சாஸ், சில்லி சாஸ் சேர்த்து 5 நிமிடம் வேகவைக்கவும்.
இதில் சர்க்கரை சேர்த்து கிளறவும். கடைசியா இதில் வினிகர் சேர்த்து 2 நிமிடம் வேகவைக்கவும். செஸ்வான் சாஸ் தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -