Guava Chutney Recipe : என்னது கொய்யாவில் சட்னி செய்யலாமா? இது தெரியாம போச்சே!
இந்தியாவில் பலவகையான சட்னி வகைகள் உள்ளன. அவற்றை இட்லி, தோசை வகைகளுக்கு தொட்டு சாப்பிடுவோம். ஒரு சிலர், தேங்காய் சட்னியை பரோட்டாவுடன் தொட்டு சாப்பிடுவார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appஇந்த பதிவில், சுலபமாக செய்யக்கூடிய வித்தியாசமான சட்னி வகையின் செய்முறையை பார்க்கவுள்ளோம். ஆம், பலரது ஃபேவரட்டாக இருக்கும் கொய்யாவை வைத்து சூப்பரான சட்னி வகை பற்றி பார்க்கலாம் வாங்க...
செங்காயாக இருக்கும் கொய்யா - 1, பச்சை மிளகாய் - 2 நறுக்கியது, சிறிய இஞ்சி துண்டு - பொடியாக நறுக்கியது, சீரகம் - 1 டீஸ்பூன், கருப்பு உப்பு - தேவையான அளவு, சால்ட் உப்பு - தேவையான அளவு, கொத்தமல்லி - 1 கட்டு, எலுமிச்சை - 1, சிறு துண்டு வெல்லம், தண்ணீர்
செய்முறை : மிக்சர் ஜாரில் நறுக்கிய கொய்யா, பச்சை மிளகாய், இஞ்சி, சீரகம், கருப்பு உப்பு, சால்ட் உப்பு சேர்த்து கொர கொரவென அரைத்துக் கொள்ளவும்.
அதன் பின்னர், அதே ஜாரில் கொத்தமல்லி, எலுமிச்சை சாறு, வெல்லம், தண்ணீர் சேர்த்து அரைக்கவும்
அவ்வளவுதான் சுவையான கொய்யா சட்னி தயார். இதை காக்ரா, ரொட்டி, பராத்தா வகைகளுக்கு தொட்டு சாப்பிட்டால் அசத்தலாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -