Golden Coin Egg Recipe : அசத்தல் சுவையில் முட்டை ரெசிபி! கோல்டன் காயின் முட்டை ரெசிபி - செய்முறை இதோ
முதலில், அவித்த முட்டையை வட்ட வடிவில் வெட்டி அதன் மேல் சோளமாவை இரண்டு பக்கமும் தடவி தனியாக வைத்துக்கொள்ள வேண்டும்.(ஒரு முட்டையில் 4 பீஸ்கள் வெட்டிக்கொள்ளலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appபின் அடுப்பில் ஒரு கடாயை வைத்து அதில் எண்ணெய் ஊற்றி, சோளமாவு கலந்து வைத்த முட்டையை சேர்த்து இரண்டு பக்கமும் பொன்னிறமாகும் வரை பொரித்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின் கடாயில் சிறுது எண்ணெய் ஊற்றி அதில் நறுக்கிய பூண்டு, இஞ்சி,பச்சை மிளகாய், வெங்காயம், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் வதங்கியதும், மிளகு தூள், மிளகாய் தூள் சேர்த்து மீண்டும் வதக்க வேண்டும்.
இதையடுத்து, அதில் சோயா சாஸ், தக்காளி கெட்சப், ரெட் சில்லி சாஸ் சேர்த்து கலந்து வெங்காயத்தாள், வெங்காயம் சேர்த்து வதக்க வேண்டும்.
.இதன் பின்பு வறுத்த முட்டையை அந்த கலவையில் சேர்த்து மெதுவாக கலந்துவிடவும். பின் அதில், நறுக்கிய வெங்காயத்தாள் சேர்த்து கலந்து இறக்கினால் சுவையான கோல்டன் காயின் முட்டை ரெசிபி தயார்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -