Food: காபி பலரின் விருப்பமாக இருப்பதற்கு என்ன காரணம்..? அப்படி என்னதான் இருக்கு..?
உலகம் முழுவதுமே காபி அருந்தும் பழக்கம் பரந்து விரிந்து கிடக்கிறது. அப்படிப்பட்ட காபி இளைஞர்களின் விருப்ப பானமாகவும் இருக்கிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகாபி ஏன் இளைஞர்களுக்குப் பிடிக்கிறது என்றால் அதில் உள்ள கஃபைன் அவர்களுக்கு ஒரு உத்வேகம் தருகிறது. அவர்கள் பாஷையிலேயே சொல்ல வேண்டுமென்றால் அது தான் எனர்ஜி கிக்
ஒரு நீண்ட வேலைப்பளு மிகுந்த நாளாகாட்டும், பரீட்சைக்கு கடைசி நேர ஆயத்த நாளாகட்டும் கஃபைன் ஒரு மாயம் செய்யத்தான் செய்கிறது.
காபியில் கஃபைன் மூளைக்கு சுறுசுறுப்பைத் தருவதால் உடல் உற்சாகமாக இயங்கத் தொடங்கும். காரணம் ஒரு கோப்பை காபிக்குப் பின்னர் உடலின் அட்ரினல் அளவு அதிகரிக்கிறது. கூடவே இதய துடிப்பு, ரத்தக் கொதிப்பு, ரத்த ஓட்டம் என எல்லாமே அதிகரிக்கும்.
காபியில் எல்லாமே கெட்டது தானா என்று காபி பிரியர்கள் கொந்தளிப்பது கேட்கிறது. அப்படியல்ல. நாங்கள் சொல்ல நினைப்பது அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது மட்டுமே. காபியில் ஆன்ட்டி ஆக்ஸிடன்ட்ஸ் அதிகமாக உள்ளது
காபியால் மன அழுத்தத்தை குறைக்க முடியும் என்றால் நம்புவீர்களா? ஆனால் காபியில் உள்ள கஃபைன் மன அழுத்ததைப் போக்கி மூட் ஸ்விங்க்ஸை தவிர்க்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -