குளிர்காலத்தில் உட்கொள்ளக்கூடிய சிறந்த பழங்கள்!
சாத்துக்குடியை அதிக அளவில் சாப்பிடுவதால் முகம் பொலிவடைந்து முகம் பளிச்சிடும். சாத்துக்குடி ஜூஸ் குடிப்பதால் அதில் உள்ள சத்துக்கள் எலும்பு தேய்மானத்தை தடுத்து, எலும்புக்கு வலு சேர்க்க உதவுகிறது. சாத்துக்குடி ஜீரண சக்தியை அதிகரித்து, பசி உணர்வை தூண்டுகிறது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appகொய்யாவில் தான் அதிக வைட்டமின் சி உள்ளது. நார்ச்சத்து அதிகம் கொண்ட கொய்யாப்பழத்தில் வைட்டமின் சி, ஏ, இ போன்ற சத்துக்களுடன் போலிக் அமிலம், பொட்டாசியம், மெக்னீசியம் போன்ற தாது சத்துக்களும் உள்ளன. நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கலுக்கு எளிய தீர்வை தருகிறது.
திராட்சை பழம், மூளை, இதயத்தை வலுவடையச்செய்யும். மேலும் வயிற்றுப்புண், மல்ச்சிக்கல் போன்ற பிரச்சனையை குணமாக்கி, கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் குமட்டல், வாய்க்கசப்பு போன்ற பிரச்சனைகளை தீர்க்கும்.
ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் அவை உங்களுக்கு மலசிக்கல் ஏற்படாமல் தடுக்க உதவும். ஆரஞ்சு பழத்தில் அதிக அளவு பொட்டாசியம் சத்துக்கள் நிறைந்துள்ளது.
அத்திப்பழம் நார்ச்சத்தும், தாதுக்களும் நிறைந்த பழமாகும். அதில் இரும்பு, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், தாமிரம், வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் எல், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் போன்ற ஊட்டச்சத்துக்களின் கலவையாக இருக்கிறது. குறிப்பாக பெண்களுக்கு அத்திப்பழம் சிறந்த மருந்தாக இருக்கும்.
ஸ்டிராபெர்ரி வைட்டமின் சி மற்றும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்த பழங்களில் ஒன்று.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -