தயிர் முதல் எண்ணெய் உணவுகள் வரை… காலையில் இதெல்லாம் சாப்பிடாதீங்க!
காலையில் வெறும் வயிற்றில் அதனைத் தவிர்க்க முயற்சி செய்ய வேண்டும். நாம் குளிர்ச்சியாக ஏதாவது குடிக்கும்போது, நம் உடல் வெப்பநிலையை அதிகரிக்க மேலும் கடினமாக உழைக்க வேண்டி இருக்கும். இதனால் நம் உடல் ஆற்றலை இழக்கும் அபாயம் உண்டு.
காலையில் எண்ணெய் உணவுகளை சாப்பிடுவது உடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
குறிப்பாக கோடையில் மிக கவனமாக இருக்க வேண்டும். எண்ணெயில் வறுத்த அல்லது பொறித்த உணவுகளை காலையில் சாப்பிட்டால், அது வெப்பமான காலத்தில், உடலில் நீரிழப்பை ஏற்படுத்தலாம்.
கண்டிப்பாக காலை வேளையில் காரமான உணவுகளை தவிர்க்க வேண்டும். வெறும் வயிற்றில் சாப்பிடும் போது அது அதிக வலியை உண்டாக்கும்.
சிட்ரஸ் பழங்களை தவிர்க்க வேண்டும். இவற்றில் சிட்ரிக் அமிலம் அதிகம் இருப்பதால் அவை புளிப்பு சுவையுடன் இருக்கும். சிட்ரஸ் பழங்களை உட்கொள்வதால் வயிற்றில் அதிகப்படியான அமிலம் உற்பத்தியாகிறது. நெஞ்செரிச்சல் மற்றும் பிற பிரச்சினைகள் இதனால் ஏற்படலாம்.
சர்க்கரை அதிகம் கொண்ட உணவுகளை காலையில் தவிர்க்க வேண்டும். அவை வயிற்றில் அதிக பிரக்டோஸ் உற்பத்தி செய்து சுமையை உண்டாக்குகின்றன. இதனால் சர்க்கரை வெறும் வயிற்றில் நுழையும் போது, உடலில் இன்சுலின் கடினமாகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது