Peanuts :வேர்க்கடலை இவ்வளவு ஆரோக்கியமானதா? தெரிஞ்சிக்கோங்க!
வேர்க்கடலை நிலக்கடலை மற்றும் மல்லாட்டை என ஒவ்வொரு வட்டார வழக்கிலும் ஒரு பெயர் வைத்து அழைக்கப்படுகிறது
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவேர்க்கடலை எண்ணெய் இந்தியாவில் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது. வறுத்தவேர்க்கடலை, அவித்த வேர்க்கடலை மற்றும் வேர்க்கடலை பர்ஃபி என இதை நிறைய வகைகளில் பயன்படுத்துகிறார்கள்
வேர்க்கடலை சட்னி மற்றும் வேர்க்கடலை துவையல் என இதன் பயன்பாடுகள் சொல்லிக்கொண்டே போகலாம்.
வேர்க்கடலையில் இருக்கும் கொழுப்பானது கரையக்கூடிய கொழுப்பு.ஆகவே இதை உண்பதினால் பாதிப்பு எதுவும் வருவதில்லை.
மோனோ-அன்சாச்சுரேட்டட் கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றங்கள், விரதம் மற்றும் விட்டமின் ஈ ஆகியவை வேர்க்கடலையில் நிறைந்திருப்பதால் நமது சருமத்தை பளபளப்புடன் வைத்திருக்கிறது.
வேர்க்கடலையில்,மக்னீசியம் மற்றும் கால்சியம் நிறைந்துள்ளதால்,இதை தொடர்ச்சியாக சாப்பிட்டு வரும்போது, வயதான காலங்களில் ஏற்படும், எலும்பு சம்பந்தமான பிரச்சினைகள் தவிர்க்கப்படுகிறது.
குழந்தைகளுக்கு தினமும்,அவித்தோ அல்லது வறுத்த வேர்க்கடலையையோ அவர்கள் உடலுக்கு ஏற்றவாறு, தயாரித்து கொடுத்தால்,அவர்களின் வளர்ச்சி அபரிமிதமாக இருக்கும். இதில் 30 சதவீதம் புரதம் நிறைந்து இருப்பதே, இதற்கு முக்கிய காரணமாகும்.
ஆன்டிஆக்ஸிடண்ட்ஸ் நிறைந்துள்ளதால், இது புற்று நோய்க்கு எதிராக போராடுகிறது. ஆகவே தினமும் வேர்க்கடலை உண்பது என்பது,புற்றுநோய் வராமல் நம்மை பாதுகாத்துக் கொள்ள சிறந்த வழியாகும்
- - - - - - - - - Advertisement - - - - - - - - -