Fried Chicken Recipe : இனி ஹோட்டல் பக்கம் போக தேவையில்லை.. இது இருந்தால் போதும் வீட்டிலேயே ஃப்ரைடு சிக்கன் செய்யலாம்!
இன்று உலகம் முழுவதும் ஃப்ரைட் சிக்கன் தினம் கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி இந்த டிஷ்ஷை எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள் : எண்ணெய், சிக்கன் - 1 கிலோ, இஞ்சி - 2 இன்ச் அளவு நறுக்கியது, பூண்டு - 12 பற்கள், பச்சை மிளகாய் - 6 நறுக்கியது, வினிகர் - 2 தேக்கரண்டி, உப்பு, முட்டை - 2, மிளகு தூள், பிரட் தூள்.
செய்முறை : கடாயில் எண்ணெய் ஊற்றி, சிக்கன் துண்டுகளை போட்டு கிண்டவும். கடாயை மூடி 10 நிமிடம் மிதமான தீயில் வேகவிடவும்.10 நிமிடம் கழித்து, அடுப்பை அணைத்து பாதி வெந்த சிக்கன் துண்டுகளை ஆறவிடவும்.
மசாலா விழுது அரைக்க, மிக்ஸியில், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், வினிகர், உப்பு போட்டு அரைக்கவும். ஆறிய சிக்கனில், மசாலா விழுது சேர்த்து கலக்கி 2 மணி நேரம் ஊறவைக்கவும் .
சிறிய கிண்ணத்தில், முட்டையை உடைத்து ஊற்றி, உப்பு, மிளகு தூள் சேர்த்து அடித்து வைக்கவும். ஊறிய சிக்கன் துண்டுகளை, முட்டை கலவையில் பிரட்டி எடுத்து, பிரட் தூளில் பிரட்டவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி, கடாய் சூடான பின் சிக்கன் துண்டுகளை பொரித்து எடுத்தால் ஃப்ரைடு சிக்கன் தயார். இதை மயோ அல்லது கெட்செப் உடன் பரிமாறவும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -