Cucumber Benefits :சரும பளபளப்பு.. உடல் ஆரோக்கியம்.. வெள்ளரிக்காயின் பயன்கள் என்ன?
வெள்ளரிக்காய் நீர்ச்சத்து மிக்கது.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appவெள்ளரிக்காய் கோடைக்காலத்தில் உடலில் நீர்ச்சத்து குறையாமல் பாதுகாக்க உதவும் முக்கியமான காய்கறி. உடல் ஆரோக்கியத்துக்கு மட்டுமல்ல சரும ஆரோக்கியத்துக்கும் வெள்ளரிக்காய் பெரிதும் உதவுகிறது.
இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் சி, வைட்டமின் கே, மாங்கனீசு, காப்பர், காப்பர் மற்றும் பொட்டாசியம் போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.
உடல் எடையை கட்டுக்குள் வைத்திருக்க வெள்ளரிக்காய் உதவுகிறது.
தொப்பையை குறைக்க பல்வேறு வழிமுறைகளை முயற்சித்தவர்கள், தொப்பை குறைய தினமும் வெள்ளரிக்காய் சேர்ந்த நீர் குடிப்பதன் மூலம் பலன் பெறலாம் என பரிந்துரைக்கப்படுகிறது.
வெள்ளரிக்காயில் மெக்னீசியம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் நிறைந்துள்ளன. இது இரத்த அழுத்த அளவை பராமரிக்கிறது.
வெள்ளரிக்காயை மென்று சாப்பிடுவதன் மூலம் வாய் துர்நாற்றம் சரியாகும்.
இது பாக்டீரியாவிலிருந்து விடுபட உதவும். வெள்ளரிக்காய், பீட்ரூட் மற்றும் செலரி சாறு யூரிக் அமிலத்தின் சேர்க்கையை குறைக்கிறது.
வெள்ளரிக்காய் எளிதான மென்மையான உணவு. இது எளிதில் ஜீரணிக்க கூடியது.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -