Tips to Sleep : நிம்மதியாக தூங்கி எழுந்துக்கொள்ள இந்த உணவுகளை டயட்டில் சேர்த்துக்கொள்ளவும்!
தூக்கம் என்பது மனித உடலுக்கும் அவர்கள் வாழும் வாழ்க்கைக்கும் மிக மிக அவசியமான ஒன்று. நாள் ஒன்றுக்கு குறைந்தது 7-8 மணிநேரம் தூங்க வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. ஆனால், வயதாக வயதாக தூக்க நிலையை அடைய மக்கள் சிரமப்படுகிறார்கள்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appமுதலில், தேவையற்ற விஷயங்களை பற்றி எப்போதும் சிந்தனை செய்துக்கொண்டே இருக்காதீர்கள். மனதை லேசாக வைத்துக்கொள்ளுங்கள்.
மனதை ரிலாக்ஸ் செய்ய செரடோனின் கொண்ட உணவுகள் உதவும். நெஞ்செரிச்சல், வாயு தொல்லை இல்லாதவர்கள் இரவு உணவில் புரதம் கொண்ட உணவுகளை சேர்த்துக்கொள்ளலாம்.
அந்த உணவுகளில் அதிக காரம், அதிக எண்ணெய் இல்லாததை உறுதிப்படுத்திக்கொள்ளவும். சமமான டயட்டை பின்பற்றவும்.
டிரிப்டோபன் கொண்ட தேன், வாழைப்பழம், பால் ஆகியவற்றை மாலை நேரத்தில் எடுத்துக்கொள்ளலாம். இரவு உணவை 8 மணிக்குள் எடுத்துக்கொள்வது நல்லது. அப்போதுதான் இரவில் நல்ல தூக்கம் வரும்.
நைட் ஷிப்ட் பார்பவர்களால், இரவு தூங்க முடியாது. அப்படிப்பட்டவர்கள், காலை நேரத்தில் இருட்டான அரையில் தூங்கவும். மேலும், அவர்கள் நல்ல டயட்டை பின்பற்றினால், உடல் ரீதியான சிக்கல்களை ஓரளவுக்கு தவிர்க்கலாம்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -