Wheat Rava Upma : சம்பா கோதுமை ரவா உப்புமா.. ட்ரை பண்ணி பாருங்க சூப்பரா இருக்கும்!
தேவையான பொருட்கள்: கோதுமை ரவா - 1 கப், கேரட் - 1 பொடியாக நறுக்கியது, பச்சை பட்டாணி - 50 கிராம், வெங்காயம் - 1 பொடியாக நறுக்கியது, தக்காளி - 1 நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 பொடியாக நறுக்கியது, இஞ்சி - 1 துண்டு நறுக்கியது, தண்ணீர் - 2 கப், உப்பு, எண்ணெய் - 3 மேசைக்கரண்டி , உளுத்தம் பருப்பு - 1/4 தேக்கரண்டி, கடலை பருப்பு - 1/4 தேக்கரண்டி, கடுகு - 1/4 தேக்கரண்டி, கறிவேப்பிலை
செய்முறை : ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடாக்கி, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கடுகு சேர்க்கவும். கடுகு பொரிந்த உடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
வெங்காயத்தின் பச்சை மணம் நீங்கியதும், கேரட், பட்டாணி, தக்காளி, உப்பு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்
அடுத்தது ஒரு கப் கோதுமை ரவைக்கு 2 கப் அளவிற்கு தண்ணீர் சேர்க்கவும். தண்ணீர் கொதித்ததும் ஒரு கப் ரவை சேர்க்கவும்.
காய்கறியுடன் ரவையை சேர்த்து நன்கு கிளறி விடவும்.பாத்திரத்தை மூடி வைத்து மிதமான சூட்டில் வைத்து தண்ணீர் வற்றும் வரை வேகவிடவும்.
தண்ணீர் வற்றியதும் ஒரு பிளேட்டில் பரிமாறினால் சுவையான கோதுமை ரவா தயார்.