Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
கோதுமை மாவு இருக்கா?சுவையான இனிப்பு கொழுக்கட்டை செய்து அசத்துங்க - இதோ ரெசிபி!
கோதுமை மாவு இருந்தால் அதை வைத்து ஆரோக்கியமான உணவு செய்து சாப்பிடலாம். குழந்தைகளுக்கு மாலை நேர ஸ்நாக்ஸ், காலை என செய்து சாப்பிடலாம். காரம், இனிப்பு என இரண்டு வகைகளாக செய்யலாம்.
Download ABP Live App and Watch All Latest Videos
View In Appதேவையான பொருட்கள்: வறுத்த கோதுமை மாவு- 250 கிராம் வெல்லம் 150 கிராம் கடலைப்பருப்பு 50 கிராம் தேங்காய் மூடி-1 ஏலக்காய்-5 உப்பு - தேவையான அளவு
செய்முறை: கோதுமை மாவில் சிறிதளவு சுடுதண்ணீர் ஊற்றி, உப்பு சேர்த்து இளகிய பதத்தில் பிசைந்து வைத்துக் கொள்ளவும். கடலைப்பருப்பை ஊறவைத்து கொரகொரப்பாக அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
தேங்காயை துருவியும், ஏலக்காயை பொடித்தும் வைத்துக்கொள்ளுங்கள். வெல்லத்தில் தண்ணீர் கலந்து பாகு பதத்தில் காய்ச்சி, அத்துடன் அரைத்து வைத்துள்ள கடலைப்பருப்பு, தேங் காய்த் துருவல், பொடித்த ஏலக் காய் இவற்றை கலந்து பூரணமாக தயார் செய்து வைத்துக்கொள்ளவும்.
தயாராக வைத்துள்ள மாவை தட்டி, நடுவில் பூரணத்தை வைத்து கையால் கொழுக்கட்டையாக பிடித்து, ஆவியில் வைத்து வேக வைத்து எடுத்துக்கொள்ளவும். இதுவே 'கோதுமை பிடி கொழுக்கட்டை'. சாப்பிட சுவை யாக இருக்கும்.
- - - - - - - - - Advertisement - - - - - - - - -